Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday 3 July 2017

03.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) 2017 உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டி ஸ்காட்லாந்தில் ____________ இல் நடைபெறவுள்ளது.
(A) எடின்புர்க்
(B) கிளாஸ்கோ
(C) மெல்ரோஸ்
(D) ஸ்டிர்லிங்
Show Answer

Answer-(B) கிளாஸ்கோ

2) இந்தியாவின் முதல் வர்த்தகரீதியான அதிதிறன் அணுமின் உலை, 'ப்ரோட்டோடைப் அதிதிறன் அணுமின் உலை’, தமிழ்நாட்டில் ______________ இல் மின் உற்பத்தி தொடங்கப்படவுள்ளது.
(A) நெய்வேலி
(B) கல்பாக்கம்
(C) கூடங்குளம்
(D) சென்னை
Show Answer

Answer-(B) கல்பாக்கம்
Explanation:
  • இந்த அணு உலையை ‘அக்சய பாத்திரம்’ என்று போற்றப்படுகிறது.
  • இது பாரம்பரிய உலைகள் விட 70% அதிக சக்தியை பெற உதவுகிறது மற்றும் பாரம்பரிய உலைகள் விட பாதுகாப்பானதாகும்.
  • உலகின் ஒரே வர்த்தக ரீதியாக இயங்கும் அதிதிறன் அணுமின் உலை ரஷ்யாவின் யூரல் மலையில் உள்ளது.
  • கல்பாக்கத்தில் இந்திய விஞ்ஞானிகள் 15 ஆண்டுகள் முயற்சித்து 'ப்ரோட்டோடைப்’ அதிதிறன் அணுமின் உலையை உருவாய்க்கியுள்ளனர்.
  • இந்திரா காந்தி அணுசக்தி ஆய்வுமையம் (IGCAR)
  • இது 1971 இல் நிறுவப்பட்டது.
  • IGCRA இன் தற்போதைய இயக்குநர் அருண் குமார் பட்டுரை.
  • சர்வதேச அணுசக்தி நிறுவனம்
  • இது 1957 ஜூலை 29 இல் நிறுவப்பட்டது.
  • தலைமையகம் – வியன்னா.
  • டைரக்டர் ஜெனரல் - யுகியா அமானோ.

  • 3) 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது ____________ என்ற இந்தியா பெண்ணின் துணிச்சலை கண்டு இஸ்ரேல் அரசு அவருக்கு அந்த நாட்டின் குடியுரிமையை வழங்கி கௌரவப்படுத்தியது.
    (A) சாண்ட்ரா சாவெல்
    (B) லீலா குமார்
    (C) சந்திர முகர்ஜி
    (D) மல்லிகா ராமசாமி
    Show Answer

    Answer-(A) சாண்ட்ரா சாவெல்
    Explanation
  • இவர் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் 2 வயதான யூத குழந்தையை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய இந்திய செவிலித் தாய்.
  • ஜூலை 5 ம் தேதி இஸ்ரேலில் வருகை தரும் பிரதமர் மோடி இவரை சந்திக்கவுள்ளார்.

  • 4) பிரதமர் மோடியால் வெளியிடப்பட்ட ‘President Pranab Mukherjee – A Statesman’ என்ற புத்தகம், இந்தியாவின் 13 வது குடியரசு தலைவரின் முழுமையான _______________________ ஆகும்.
    (A) வாழ்க்கை வரலாறு
    (B) சுயசரிதை
    (C) புகைப்பட பதிவு
    (D) சோதனை பதிவு
    Show Answer

    Answer-(C) புகைப்பட பதிவு

    5) தில்லி காவல்துறை ஜனவரி 1, 2015 அன்று பெண்கள் பாதுகாப்பிற்காக மொபைல் செயலி _____________ ஐ தொடங்கியது.
    (A) Raksha
    (B) Himmat
    (C) Smart 24*7
    (D) bSafe
    Show Answer

    Answer-(B) Himmat
    Explanation:
    தற்போது டெல்லி அரசு இதன் மேன்படுத்தப்பட்ட version- ஐ வெளியிடவுள்ளது.

    6) சுவிஸ் வங்கிகளில் பணம் வைத்திருக்கும் நாடுளின் பட்டியலில் 2016 இறுதியில் இந்திய _____________ இடத்தில் உள்ளது.
    (A) 66th
    (B) 77th
    (C) 88th
    (D) 99th
    Show Answer

    Answer-(C) 88th

    7) இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் மீன் பண்ணை ____________ நகரத்தில் உள்ள பிர்சா முண்டா உயிரியல் பூங்காவில் திறக்கப்பட்டது.
    (A) கொல்கத்தா
    (B) ராஞ்சி
    (C) ராய்ப்பூர்
    (D) நாக்பூர்
    Show Answer

    Answer-(B) ராஞ்சி

    8) BIRAC stands for __________________________.
    (A) Biotechnology Industry Research Assistance Council
    (B) Bio-Industry Research Assistance Council
    (C) Biological Industrial Research Assistance Council
    (D) Biological Institutional Research and Collaboration
    Show Answer

    Answer-(A) Biotechnology Industry Research Assistance Council
    Explanation:
  • தேசிய பயோஃபார்மா மிஷன் 2017 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் துவங்கியது.
  • நாட்டில் உயிர் வேதியியல் வளர்ச்சியை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு, BIRAC ஆல் செயல்படுத்தப்பட உள்ளது.

  • 9) 2017 மோகன் பகன் ரத்னா (ஜுவல்) விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது?
    (A) அருமொய்னாய்கம்
    (B) கருணா சங்கர் பட்டாச்சார்யா
    (C) சையத் நயீமுடின்
    (D) சுப்ரதா பட்டாச்சார்யா
    Show Answer

    Answer-(D) சுப்ரதா பட்டாச்சார்யா
    Explanation:
    மோகன் பகன் ரத்னா ஒவ்வொரு வருடமும் மோகன் பகன் தினத்தில் (ஜூலை 29 அன்று) முன்னாள் கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கப்படும்.

    Current Affairs Quiz

    1 comment: