Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday 4 July 2017

04.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) தேசிய புத்தகம் அறக்கட்டளை _________ அன்று இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.
(A) 1 August 1952
(B) 1 August 1954
(C) 1 August 1957
(D) 1 August 1960
Show Answer

Answer-(C) 1 August 1957
Explanation:
  • இது மனித வள மேம்பாட்டு அமைச்சத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பு.
  • இது ஆகஸ்ட் 1, 2017 அன்று தனது 60-வது ஆண்டு விழாவை கொண்டாடாயிருக்கிறது.
  • அதன் தலைவர் - பல்தேவ் பாய் ஷர்மா.
  • இது 'ஒரு புத்தகம் ஒவ்வொரு கையிலும்' என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கும் நன்கொடைகளை புத்தக வடிவில் வழங்கும்.

  • 2) அமெரிக்காவில் இந்த ஆண்டுக்கான தேசிய பேச்சு மற்றும் விவாதப் போட்டியில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட சீக்கிய மாணவரான ___________ வெற்றி பெற்றார்.
    (A) அனன்யா வினய்
    (B) ரகுல் சிங்
    (C) ஜே. ஜே. கபூர்
    (D) மோகன் கபூர்
    Show Answer

    Answer-(C) ஜே. ஜே. கபூர்
    Explanation:
  • 'லெட்ஸ் டான்ஸ்’ என்ற தலைப்பில் தனது சொந்த உரையை தானே எழுதியுள்ளார்.

  • 3) இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய திறன் பூங்கா-வின் அடிக்கல் ___________ இல் அமைக்கப்பட்டது.
    (A) போபால்
    (B) ராஞ்சி
    (C) நாக்பூர்
    (D) புனே
    Show Answer

    Answer-(A) போபால்
    Explanation
    இது சிங்கப்பூர் தொழில்நுட்ப கல்வி மற்றும் கல்விச் சேவைகளின் (ITEES) உதவியுடன் அமைக்கப்படவுள்ளது.

    4) கேரளா அரசாங்கம் உடன் பணிபுரியும் தொழிலார்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரும் அவர்கள் பணிக்கு செல்லும்போது இணைந்து பயணிக்க எதுவாக அவர்களை இணைக்கும் ______________ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
    (A) Cooperate
    (B) G-Ride
    (C) Ride Together
    (D) Easy Work
    Show Answer

    Answer-(B) G-Ride

    5) இஸ்ரேலின் பிரதமர் யார்?
    (A) ரீவன் ரிவ்லின்
    (B) பெஞ்சமின் நேடன்யாகு
    (C) எகுட் ஓல்மெர்ட்
    (D) ஏரியல் ஷரோன்
    Show Answer

    Answer-(B) Benjamin Netanyahu
    Explanation:
  • இஸ்ரேல் ஜனாதிபதி - ரீவன் ரிவ்லின்.
  • இந்த வருடம் ஜூலை 4ம் தேதி இஸ்ரேல் வருகை தரும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.
  • இந்த ஆண்டு இந்தியா-இஸ்ரேல் உறவு 25வது ஆண்டை குறிக்கிறது.

  • Current Affairs Quiz

    No comments:

    Post a Comment