Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Sunday 9 July 2017

09.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) UDAN (Ude Desh Ka Aam Naagrik அல்லது பிராந்திய இணைப்புத் திட்டம்) - கீழ் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் சிறிய விமான சேவையை தொடங்க அங்கீகரிக்கப்பட்ட தமிழகத்தின் 3 நகரங்கள் யாவை?
1. வேலூர்
2. சேலம்
3. ஈரோடு
4. ஓசூர்
5. நெய்வேலி

(A) 1, 2 மற்றும் 3
(B) 2, 3 மற்றும் 4
(C) 2, 4 மற்றும் 5
(D) 1, 4 மற்றும் 5
Show Answer

Answer-(C) 2, 4 மற்றும் 5

2) இந்தியா- பிரிட்டன் இடையே பரஸ்பர குற்றவாளிகளை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு ____________.
(A) டிசம்பர் 30, 1993
(B) டிசம்பர் 30, 2003
(C) டிசம்பர் 30, 2013
(D) டிசம்பர் 30, 2016
Show Answer

Answer-(A) டிசம்பர் 30, 1993
Explanation:
a. இந்த ஒப்பந்தம் 1992 இல் கையெழுத்திட்டது.
b. இதுவரை 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சமிர்பாய் வினுபாயே படேல் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனில் வாழும் இந்தியாவில் தேடப்படுபவர்:
  • விஜய் மல்லயா
  • லலித் மோடி etc.,

  • 3) 2015-ஆம் நடந்த UNFCCC இன் 21-ஆம் COP ______ இல் நடைபெற்றது.
    (A) ரியோ டி ஜெனிரோ
    (B) பாரிஸ்
    (C) கியோட்டோ
    (D) மாரக்கேஷ்
    Show Answer

    Answer-(B) பாரிஸ்
    Explanation:
    1. இது "பாரிஸ் உடன்படிக்கை காலநிலை மாற்றம்" என்று இதை அழைக்கப்படுகிறது.
    2. ஜூன் 2017 வரை, 195 UNFCCC உறுப்பினர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதில் 153 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
    3. ஜூன் 2017-ல், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.
  • 20-வது COP லிமா, பெரு (2014)
  • 21-ஆம் COP பாரிஸ், பிரான்சு (2015)
  • 22-ஆம் COP மராகேஷ், மொராக்கோ (2016)
  • 23-வது COP ஜெர்மனியில் பான் நகரில் (நவம்பர், 2017)

  • 4) 2018-ஆம் ஆண்டின் 13-வது ஜி-20 உச்சி மாநாடு ________________ இல் நடைபெறும்.
    (A) ப்யூனோஸ் அயர்ஸ், அர்ஜென்டினா
    (B) பிரேசிலியா, பிரேசில்
    (C) கராகஸ், வெனிசுலா
    (D) லிமா, பெரு
    Show Answer

    Answer-(A) ப்யூனோஸ் அயர்ஸ், அர்ஜென்டினா
    Explanation:
  • 12 வது ஜி 20 உச்சி மாநாடு 2017 ஜெர்மனியில் ஹம்பர்க்கில்.
  • 13 வது ஜி 20 உச்சிமாநாடு 2018 அர்ஜென்டீனாவின் ப்யூனோஸ் ஏர்ஸ்.
  • 14 வது ஜி 20 உச்சி மாநாடு 2019 ஜப்பானில்.
  • 15 வது ஜி 20 உச்சிமாநாடு 2020 சவுதி அரேபியாவில்

  • 5) மத்திய அரசு நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் குடியிருப்பு மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் ஆகியவற்றை இணைத்து ___________ என்ற புதிய அமைச்சகத்தை உருவாகியுள்ளது.
    (A) நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம்
    (B) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
    (C) நகர அபிவிருத்தி விவகார அமைச்சகம்
    (D) வறுமை ஒழிப்பு விவகாரங்கள் அமைச்சகம்
    Show Answer

    Answer-(B) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
    Explanation:
    The two Ministries, however, have one Union Minister-M.Venkaiah Naidu-incharge.

    6) தலித் மற்றும் கிரிஜீன் மணப்பெண்ணுக்கு 'கல்யாண லக்ஷ்மி' திட்டத்தை எந்த மாநிலம் துவக்கியது?
    (A) தமிழ்நாடு
    (B) தெலுங்கானா
    (C) கர்நாடக
    (D) ஆந்திரப் பிரதேசம்
    Show Answer

    Answer-(B) தெலுங்கானா
    Explanation:
    1. திருமண உதவி - ரூபாய் 51,000- த்தை பெண் குழந்தையின் குடும்பத்திற்கு அவளின் திருமணம் செய்ய வழங்கப்படும்.
    2. இந்த வழியில், தெலுங்கானா அரசாங்கம் முஸ்லீம் மணமகள்களுக்கு ' ஷாதி முபாரக்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    7) ___________ இந்தியாவின் முதல் உலக பாரம்பரிய நகரமாகிறது.
    (A) ஆக்ரா
    (B) அகமதாபாத்
    (C) அலகாபாத்
    (D) அலிகார்
    Show Answer

    Answer-(B) அகமதாபாத்
    Explanation:
    1. போலந்தில் உள்ள க்ரகொவ் நகரில் (2nd-12th July, 2017) யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 41 வது கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
    2. 15 ஆம் நூற்றாண்டில் குஜராத்தின் சுல்தான் அகமது ஷா 1 இந்த நகரை நிறுவினார்.

    8) பள்ளிக்கல்வி மாணவர்கள்-விஞ்ஞானிகளுடன் இணைவதற்கு புது டெல்லியில் ________ திட்டம் தொடங்கப்பட்டது.
    (A) AAVISHKAR
    (B) JIGYASA
    (C) VIGYAN PRACHAR
    (D) VIGYAN PARICHAY
    Show Answer

    Answer-(B) JIGYASA
    Explanation:
  • இது ஜூலை 6, 2017 இல் தொடங்கப்பட்டது.
  • அதன் நோக்கம் மாணவர்களின் வகுப்பறை கற்றல் ஒரு நன்கு திட்டமிடப்பட்ட ஆய்வக அடிப்படையிலான கற்றல் முறையாக இருக்கவேண்டும் என்பதாகும்.

  • 9) 2017 இல் உலகளாவிய இணைய பாதுகாப்பு பட்டியலில் 193 நாடுகளில் இந்தியா ___ இடத்தில் உள்ளது.
    (A) 21st
    (B) 22nd
    (C) 23rd
    (D) 24th
    Show Answer

    Answer-(C) 23rd
    Explanation:
    UNITU (ஐ.நா. சர்வதேச தொலைத்தொடர்பு கழகம்) இந்த ஆய்வுவை நடத்தியது.
  • 1st rank – சிங்கப்பூர்
  • 2nd rank – அமெரிக்கா

  • 10) இந்திய வம்சாவளியான _________________ சமூகப் பணிக்கான ஆஸ்திரேலியாவின் உயர்ந்த குடிமகன் ‘Order of Australia’ விருதினை வாங்கினார்.
    (A) குருஸ்வாமி ஜெயராமன்
    (B) கல்பனா ராமமூர்த்தி
    (C) சுப்பிரமணிய பிள்ளை
    (D) ராமமூர்த்தி செட்டியார்
    Show Answer

    Answer-(A) குருஸ்வாமி ஜெயராமன்

    11) உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் _____________-ல் முதல் மக்காச்சோளம் சார்ந்த மெகா உணவு பூங்காவிற்கு அடித்தளத்தை அமைத்தது.
    (A) அமராவதி, தெலுங்கானா
    (B) கபூர்தாலா, பஞ்சாப்
    (C) மாண்டியா, கர்நாடகம்
    (D) குதுன்பூர், உத்தரப் பிரதேசம்
    Show Answer

    Answer-(B) கபூர்தாலா, பஞ்சாப்
    Explanation:
  • இது ‘Kisan SAMPADA Yojana’ என்ற புதிய மத்திய துறை திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
  • SAMPADA - Scheme for Agro-Marine Processing and Development of Agro-Processing Clusters.
  • இது பஞ்சாபின் பாலைவனமாவதை தடுக்க இந்தியா வரலாற்றில் முதன்மையான & தீவிரமான நடவடிக்கை ஆகும்.

  • 12) 2018-வாக்கில் தலித் மாணவர்களுக்கு இந்தியாவின் முதல் பல்கலைக்கழகத்தை உருவாக்கும் முதல் மாநிலம் __________.
    (A) ஆந்திரப் பிரதேசம்
    (B) கர்நாடகா
    (C) ஒடிஷா
    (D) தெலுங்கானா
    Show Answer

    Answer-(D) தெலுங்கானா
    Explanation:
    இது ஹைதராபாத்தில் 2018-வாக்கில் உருவாக்கப்படவுள்ளது.

    13) காவ்த்லங் துய்ப்பு (Khawthlang Tuipui) நதி ________-ல் அமைந்துள்ளது.
    (A) அருணாச்சல பிரதேசம்
    (B) மிசோரம்
    (C) மேகாலயா
    (D) அசாம்
    Show Answer

    Answer-(B) மிசோரம்
    Explanation:
    1) இந்தியா மற்றும் பங்களாதேஷ் இந்த காவ்த்லங் துய்ப்பு (அல்லது கர்ணபிஹூக்ளி) நதியின் மீது ஒரு பாலத்தை அமைக்க முடிவு செய்துள்ளன.
    2) இது இரு அண்டை நாடுகளுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்தவும் மற்றும் வர்த்தகத்தை எளிதாகவும் உதவும்.

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment