Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday 11 July 2017

11.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) தமிழ்நாட்டில், அல்ட்ரா மெகா அனல் மின் நிலையம் (4000 மெகாவாட்) எங்கு தொடங்க இந்திய அரசு அனுமதித்துள்ளது?
(A) செய்யூர், காஞ்சிபுரம் மாவட்டம்
(B) காமுதி, ராமநாதபுரம் மாவட்டம்
(C) சோலபுரம், சிவகங்கை மாவட்டம்
(D) திருப்பபுலியூர், கடலூர் மாவட்டம்
Show Answer

Answer-(A) செய்யூர், காஞ்சிபுரம் மாவட்டம்

2) 1962-ல் புதுச்சேரியை யூனியன் பிரதேசமாக மாற்றிய இந்திய அரசியலமைப்பு திருத்த சட்டம் எது?
(A) 12வது
(B) 14வது
(C) 21வது
(D) 23வது
Show Answer

Answer-(B) 14வது
Explanation:
  • 2006 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரி 'புதுச்சேரி' என பெயர் மாற்றப்பட்டது.
  • பிரிவு VIII ஷரத்து 239 முதல் 241 வரை உள்ள ஷரத்து யூனியன் பிரதேசங்களை பற்றி குறிப்பிடுகிறது.

  • 3) ‘Aadhaar : A Biometric History’ என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
    (A) அருண் ஜேட்லி
    (B) நாராயண சாஸ்திரி
    (C) ஷங்கர் அய்யர்
    (D) நிர்மலா சீதாராமன்
    Show Answer

    Answer-(C) ஷங்கர் அய்யர்

    4) தமிழ்நாட்டை சேர்ந்த __________ என்ற வீரர் 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 2 தங்கப் பதக்கங்களை வென்றார் (புபனேஸ்வர், ஒடிசா).
    (A) அரோக்கியா ராஜீவ்
    (B) பூ. சித்ரா
    (C) எம். ஆர். பூவம்மா
    (D) கோவிந்தன் லக்ஷ்மன்
    Show Answer

    Answer-(D) கோவிந்தன் லக்ஷ்மன்
    Explanation:
  • மொத்தம் 29 பதக்கங்களை (12 தங்கம், 5 வெள்ளி மற்றும் 12 வெண்கல) வென்று இந்தியா பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
  • கோவிந்தன் லக்ஷ்மன் (தமிழ்நாடு) - 2 தங்கம் (ஆண்கள் 5000 மீ & 10,000 மீ ஓட்டம்).
  • அரோக்கியா ராஜீவ் (தமிழ்நாடு) - 1 தங்கம் (ஆண்கள் 4 * 400 ரிலே) மற்றும் 1 வெள்ளி (ஆண்கள் 400 மீ ஓட்டம்).
  • பூ. சித்ரா (கேரளா) - 1 தங்கம் (பெண்கள் 1500 மீ ஓட்டம்).
  • எம். ஆர். பூவம்மா (கர்நாடகா) - 1 தங்கம் (மகளிர் 4 * 400 ரிலே) (அவர் 2015 இல் அர்ஜுனா விருது பெற்றார்).

  • 5) GST புலனாய்வு நிறுவனத்தின் தலைவராக யாரை நியமித்து உள்ளது?
    (A) ஜான் ஜோசப்
    (B) அரவிந்த் சுப்பிரமணன்
    (C) நிர்மல் பானர்ஜி
    (D) ஜெய் நாராயணன்
    Show Answer

    Answer-(A) ஜான் ஜோசப்

    6) மேற்கு வங்கத்தின் உத்தரபிரான் மாவட்டத்தில் உள்ள தேசிய லோக் அதாலத்தின் முதல் மூன்றாம் பாலின நீதிபதி யார்?
    (A) மாநபி பந்தோபாத்யாய்
    (B) மது கின்னார்
    (C) ஜாய்தா மோன்டல்
    (D) பிரதிகா யாஷினி
    Show Answer

    Answer-(C) ஜாய்தா மோன்டல்
    Explanation:
  • மாநபி பந்தோபாத்யாய் - இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வர் (2015 ல் மேற்கு வங்கத்தில் கிருஷ்ணர் நகர் மகளிர் கல்லூரி).
  • மது கின்னார் - இந்தியாவின் முதல் திருநங்கை மேயர் (ராய்கர், சத்தீஸ்கர், 2015).
  • பிரதிகா யாஷினி– இந்தியாவின் முதல் திருநங்கை காவல் துணை ஆய்வாளர் (தமிழ்நாடு 2017-ல்)

  • Current Affairs Quiz

    No comments:

    Post a Comment