Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Thursday 13 July 2017

12.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
(A) அனில் கும்ளே
(B) ரவி சாஸ்திரி
(C) ராகுல் திராவிட்
(D) ஜாகீர் கான்
Show Answer

Answer-(B) ரவி சாஸ்திரி

2) ஜூலை 11 அன்று கொண்டாடப்படும் உலக மக்கள் தினம் 2017-க்கான கரு (theme) என்ன?
(A) Family Planning: Empowering People, Developing Nations
(B) Investing in Teenage Girls
(C) Vulnerable Populations in Emergencies
(D) A time to reflect on population trends and related issues
Show Answer

Answer- (A) Family Planning: Empowering People, Developing Nations

3) OECD-FAO வேளாண் கண்ணோட்டம் 2017-2026-படி, 2026 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் யார்?
(A) அமெரிக்கா
(B) பிரேசில்
(C) நார்வே
(D) இந்தியா
Show Answer

Answer-(D) இந்தியா
Explanation:
  • 'OECD-FAO வேளாண் கண்ணோட்டம் 2017-2026- அறிக்கையை' ஐ.நா. மற்றும் OECD (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு) வெளியிட்டுள்ளது.
  • பால் உற்பத்தியில் 2026-ல் இந்தியா 49% வளர்ச்சியடையும்.
  • உலக மக்கள் தொகை 7.3 முதல் 8.2 பில்லியன் வரை அதிகரிக்கும்.
  • இந்தியாவின் மக்கள் தொகை 1.3 முதல் 1.5 பில்லியன் வரை உயரும் (கிட்டத்தட்ட 150 மில்லியன் அதிகரிப்பு).
  • இந்தியா மற்றும் சப்-சஹாரா ஆப்பிரிக்கா மொத்த மக்கள் தொகையில் 56%-ஆக கணக்கிடப்படும்.

  • 4) சமீபத்திய தசாப்தங்களில் வன உயிரினங்களின் உயிரியல் அழிப்பு(Biological Annihilation) என்பது பூமியின் வரலாற்றில் எத்தனையாவது ________ வெகுஜன அழிவு ஆகும்.
    (A) மூன்றாவது
    (B) நான்காவது
    (C) ஐந்தாவது
    (D) ஆறாவது
    Show Answer

    Answer-(D) ஆறாவது
    Explanation:
    1. இது U.S Journal Proceedings of the National Academy of Science-ஆல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு.
    2. முதுகெலும்புள்ள விலங்குகளில் 30%-க்கும் அதிகமான உயிரினங்கள் மக்கள் தொகையில் குறைந்து கொண்டு வருகின்றன.
    3. அவைகள் தற்போது:
  • 20,000 சிங்கங்கள்,
  • 7000-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள்,
  • 500 முதல் 700 இராட்சத பாண்டாக்கள்,
  • சுமார் 250 சுமாத்திரா காண்டாமிருகங்கள் மட்டுமே காடுகளில் உள்ளது.
  • 4. சராசரியாக 2 முதுகெலும்பு கொண்ட உயிரினங்கள் ஒவ்வொரு வருடமும் மறைந்து விடுகின்றன.
    5. பல வகையான பாலூட்டிகள், ஒன்று அல்லது இரண்டு தசாப்தங்களுக்
    கு முன்னர் பாதுகாப்பாக இருந்தன, இப்போது அழிந்து போயுள்ளன.
    6. வனவிலங்கு சரிவின் முக்கிய காரணம்:
  • காலநிலை மாற்றம் (ஒரு பெரிய அச்சுறுத்தல்),
  • வாழ்விடம் இழத்தல்,
  • நுகர்வுக்கு மேல் மக்கள் தொகை,
  • ஆக்கிரமிக்கும் உயிரினம்,
  • நோய் மற்றும் அத்துடன் வேட்டையாடுதல்.

  • 5) ______ என்பது அரசு துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து 50,000 ரூபாயிலிருந்து 30,00,000 ரூபாய் வரை பொருட்கள் மற்றும் சேவைகளை நேரடி கொள்முதல் செய்ய உதவுகிறது.
    (A) GeM
    (B) e-Purchase
    (C) e-Service
    (D) e-Seva
    Show Answer

    Answer-(A) GeM
    Explanation:
  • இ-சந்தைப்பகுதி (GeM) என்பது வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சின் கீழ் உள்ளது.
  • இது அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் முகவர் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதற்கு ஒரு ஆன்லைன் சந்தை மேடை.
  • தற்போது 40,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் 150-க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் போக்குவரத்து சேவையை GeM POC portal-ல் தற்போது கிடைக்கிறது.
  • இதுவரை 6 மாநிலங்கள் GeM உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், தமிழ்நாடு மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் GeM ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றும்.

  • 6) இவற்றில் பாலின மூலம் பரவும் நோய்த்தாக்கம் எது?
    (A) மேகவெட்டை நோய் (Gonorrhea)
    (B) ஹெச்.ஐ.வி
    (C) ஹெபடைடிஸ் பி
    (D) மேலே உள்ள அனைத்தும்
    Show Answer

    Answer-(D) மேலே உள்ள அனைத்தும்

    7) சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுங்கள்
    1. மகாராஷ்டிரா மாநிலம் பெண்களுக்கென இலவசமாக உட்செலுத்தப்படும் கருக்கலைப்பு மருந்தை அறிமுகப்படுத்தியது.
    2. தனியார் மருத்துவமனைகளில் இலவச அறுவை சிகிச்சை திட்டம் தில்லி அரசு அறிமுகப்படுத்தியது.
    (A) 1 மட்டுமே
    (B) 2 மட்டுமே
    (C) இரண்டும்
    (D) எதுவும் இல்லை
    Show Answer

    Answer-(C) இரண்டும்

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment