Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Thursday 13 July 2017

13.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) ஒரு நாள் கிரிக்கெட்டில் 6000 ஓட்டங்களை(runs) கடந்த முதல் பெண் வீரர் யார்?
(A) மிதிலி ராஜ்
(B) சார்லட் எட்வர்ட்ஸ்
(C) லதிகா குமாரி
(D) ஸ்ம்ரிதி மந்தன
Show Answer

Answer-(A) மிதிலி ராஜ்
Explanation:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்.

2) 500 மீட்டர் மதுபான தடை விதிக்கப்பட்டதிலிருந்து முற்றிலும் விலக்கு பெற்ற மாநிலங்கள் எவை?
1. சிக்கிம்
2. மேகாலயா
3. அருணாச்சல பிரதேசம்
4. அந்தமான் & நிக்கோபார் தீவு
5. தமிழ்நாடு
6. கேரளா

(A) 1, 2,3 மற்றும் 4
(B) 1,2,3 மற்றும் 5
(C) 2,3,4 மற்றும் 6
(D) மேலே உள்ள அனைத்தும்
Show Answer

Answer- (A) 1, 2,3 மற்றும் 4
Explanation:
  • நீதிமன்றம் 20,000 அல்லது அதற்கு குறைவான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் இந்த கட்டுப்பாட்டை 500 மீட்டரியிருந்து 220 மீட்டராக குறைத்துள்ளது.
  • எனவே இமாச்சலப்பிரதேசத்தில் நெடுஞ்சாலைகளிலிருந்து 220 மீட்டருக்கு மேல் மது விற்பனை செய்யப்படலாம்.

  • 3) காஸிரங்கா தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?
    (A) அசாம்
    (B) பீகார்
    (C) மேற்கு வங்கம்
    (D) அருணாச்சல பிரதேசம்
    Show Answer

    Answer-(A) அசாம்
    Explanation:
  • இது 1908 இல் நிறுவப்பட்டது.
  • இது அசாம் மாநிலத்தின் கோலாஹாட் & நாகான் மாவட்டங்களில் பரவியுள்ளது.
  • இது இந்திய காண்டாமிருகத்தின் (ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்) மிக முக்கியமான வாழ்விடமாகும்.

  • 4) செப்டம்பர் 17 முதல் 20 வரை நடக்கவுள்ள தெற்காசிய இளைஞர் உச்சிமாநாடு 2017 ____________ல் நடைபெறவுள்ளது.
    (A) புவனேஸ்வர், ஒடிசா
    (B) பனாஜி, கோவா
    (C) கொச்சி, கேரளா
    (D) விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்
    Show Answer

    Answer-(A) புவனேஸ்வர், ஒடிசா
    Explanation:
    இதன் கரு - ‘Creating a sustainable Future: Empowering Youth with Sustainable Opportunities’.

    5) சரியான கூற்றை கண்டுபிடிக்கவும்
    1. இந்த பிரபஞ்சத்தில் 600 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் அமைந்துள்ள EBLM JO555-57Ab என்ற மிகச்சிறிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
    2. சனி கிரகத்தின் அளவைவிட சற்று பெரியது மற்றும் பூமியின் மீது மனிதர்கள் உணரக்கூடியதைவிட அதன் ஈர்ப்பு விசை சுமார் 300 மடங்கு வலுவாகும்.
    (A) 1 மட்டுமே
    (B) 2 மட்டுமே
    (C) இரண்டும்
    (D) எதுவும் இல்லை
    Show Answer

    Answer-(C) இரண்டும்

    6) 'தி ஆர்க்மென்டேட்டிவ் இந்தியன்' என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
    (A) அருந்ததி ராய்
    (B) சேதன் பகத்
    (C) அமர்த்தியா சென்
    (D) சல்மான் ருஷ்டி
    Show Answer

    Answer-(C) அமர்த்தியா சென்

    7. மேகாலயா அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட LIFE திட்டம் அனைத்து ஏழை மற்றும் பாதிக்கப்படும் பெண்களை சுய உதவி குழுக்களின் கீழ் கொண்டுவருவதாகும். LIFE-இன் விரிவாக்கம் __________.
    (A) Livelihood Intervention & Facilitation of Entrepreneurship
    (B) Life Insurance Facilitated Entrepreneurship
    (C) Lovable Indian Female Entrepreneurship
    (D) Live International Factory oriented Entrepreneurship
    Show Answer

    Answer-(A) Livelihood Intervention & Facilitation of Entrepreneurship
    Explanation:
    இது பொருளாதார ஏற்றத்தாழ்வின்மை மற்றும் உள்ளடக்கிய அபிவிருத்தி முன்னேற்றத்தை உறுதிப்படுத்துகிறது.

    8) கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதிகளை நிர்ணயித்த முதல் மாநிலம் எது?
    (A) அரியானா
    (B) ராஜஸ்தான்
    (C) பஞ்சாப்
    (D) தில்லி
    Show Answer

    Answer-(B) ராஜஸ்தான்
    Explanation:
  • குறைந்தபட்ச கல்வித் தகுதி - 5 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை,
  • முதன்மை குழு உறுப்பினர்களுக்கு - வகுப்பு 8 வரை,
  • மாவட்ட உறுப்பினர்களுக்கு - வகுப்பு 10 வரை,
  • மாநில அளவிலான குழுவுக்கு – பட்டதாரி வரை இருக்கவேண்டும்.

  • 9) ஒவ்வொரு ஆண்டின் ஜூலை 12-ஐ ________________ என்று கொண்டாடப்படுகிறது.
    (A) மலாலா தினம்
    (B) சர்வதேச அமைதி தினம்
    (C) நெல்சன் மண்டேலா தினம்
    (D) உலக அணு ஆயுத நாள்
    Show Answer

    Answer-(A) மலாலா தினம்
    Explanation:
  • 2012 இல் - பாகிஸ்தான் அரசாங்கத்தால் முதல் தேசிய இளைஞர் அமைதி பரிசு வழங்கப்பட்டது.
  • 2014 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்றவர்களில் மிகவும் இளையவர் (17 வயது) இவர்தான்.
  • 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கனடாவின் குடியுரிமை வழங்கப்பட்டது. கனடாவின் நாடாளுமன்ற மேல் சபையில் (House of Commons)உரையாற்றிய மிகவும் இளையவர் இவர்தான்.

  • Current Affairs Quiz

    No comments:

    Post a Comment