Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Sunday 16 July 2017

16.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) 2017 விம்பிள்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றவர் யார்?
(A) செரீனா வில்லியம்ஸ்
(B) வீனஸ் வில்லியம்ஸ்
(C) கார்பின் முகுருசா
(D) அன்கேலியூ கெர்பர்
Show Answer

Answer-(C) கார்பின் முகுருசா
Explanation:
  • விம்பிள்டன்-ல் வெற்றிபெற்ற இரண்டாவது ஸ்பானிய பெண் கார்பின் முகுருசா.
  • 1994-ம் ஆண்டு முதன் முதலாக இவரின் பயிற்சியாளர் கோச்சிக்கா மார்டினெஸ் பட்டத்தை வென்றார்.

  • 2) காமராஜர் விருதுநகர்-ல் __________ அன்று பிறந்தார்.
    (A) ஜூலை 15, 1903
    (B) ஜூலை 15, 1913
    (C) ஜூலை 15, 1923
    (D) ஜூலை 15, 1933
    Show Answer

    Answer- (A) ஜூலை 15, 1903
    Explanation:
    1. தமிழ்நாட்டின் முதலமைச்சராக -1954 முதல் 1963 வரை.
    2. 1960-களில் இந்திய அரசியலில் அவர் 'கிங் மேக்கர்' என்று பரவலாக பேசப்பட்டார்.
  • இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக 1964-1967 வரை பணியாற்றினார்.
  • லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகிய இருவரும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்க காரணமாக இருந்தவர்.
  • 3. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான 'உப்பு சத்தியாகிரகம்' போராட்டத்தில் கலந்துகொண்டதால் இவரை 1930 ம் ஆண்டு ஜூன் மாதம் கல்கத்தாவிலுள்ள அலிபூர் சிறையில் முதல் முறையாக அடைக்கப்பட்டார்.
    4. 1942 ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டு அமராவதி சிறைச்சாலையில் 3 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
    5. பாரத் ரத்னா - 1976 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது (இறந்த பிறகு).

    3) கணிதத்தில் ஃபீல்ட்ஸ் பதக்கம் (Fields Medal) வென்ற முதல் பெண்மணி யார்?
    (A) கத்தீன் மொராவெட்ஸ்
    (B) மரியாம் மிர்சாகானி
    (C) மேரி ருடின்
    (D) ஈவ்லின் கிரான்வில்லே
    Show Answer

    Answer-(B) மரியாம் மிர்சாகானி
    Explanation:
  • ஈரானிய-கணிதவியலாளரான இவர் 15 July 2017-ல் இறந்தார்.
  • மதிப்புமிக்க ஃபீல்ட்ஸ் பதக்கம் (Fields Medal) நோபல் பரிசுக்கு சமமானதாகும்.

  • 4) ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் தலைமையகம் ____________ மடம் ஆகும்.
    (A) மும்பை
    (B) சென்னை
    (C) பெங்களூர்
    (D) பேலூர்
    Show Answer

    Answer-(D) பேலூர்
    Explanation:
    இது மேற்கு வங்காளத்தில் உள்ள ஹுக்ளி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.

    5) பெண்கள் உலகக்கோப்பையில் 1000-ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண்மணி யார்?
    (A) மிதிலி ராஜ்
    (B) சார்லட் எட்வர்ட்ஸ்
    (C) லதிகா குமாரி
    (D) ஸ்ம்ரிதி மந்தன
    Show Answer

    Answer-(A) மிதிலி ராஜ்

    6) உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2017 ஜூலை மாதம் 14 முதல் 23-ஆம் தேதி வரை _______ இல் நடைபெறுகிறது.
    (A) புது தில்லி
    (B) பெய்ஜிங்
    (C) லண்டன்
    (D) நியூயார்க்
    Show Answer

    Answer-(C) லண்டன்
    Explanation:
    உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2017-இல் இந்தியாவிற்கான முதல் தங்கம் ஆண்கள் ஈட்டி ஏறிதலில் சுந்தர் சிங் குர்ஜர் மூலம் கிடைத்தது.

    7) ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ-வின் வாக்குகளின் மதிப்பு ________.
    (A) நாட்டின் மொத்த மக்கள்தொகை / நாட்டின் மொத்த எம்.எல்.ஏ.வின் எண்ணிக்கை
    (B) (நாட்டின் மொத்த மக்கள்தொகை / நாட்டின் மொத்த எம்.எல்.ஏ.வின் எண்ணிக்கை) * (1/1000)
    (C) மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை / தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வின் மொத்த எண்ணிக்கை
    (D) (மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை / தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வின் மொத்த எண்ணிக்கை) * (1/1000)
    Show Answer

    Answer-(D) (மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை / தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வின் மொத்த எண்ணிக்கை) * (1/1000)

    8) மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடை சட்டம், 1993 எப்போது நடைமுறைக்கு வந்தது?
    (A) டிசம்பர் 6, 2012
    (B) டிசம்பர் 6, 2013
    (C) டிசம்பர் 6, 2014
    (D) டிசம்பர் 6, 2015
    Show Answer

    Answer-(B) டிசம்பர் 6, 2013
    Explanation:
    1. ஆரேக்கியமில்லாத கழிவறைகளை அகற்றுதல்.
    2. தடை செய்கிறது:
  • மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் வேலை.
  • கழிவுநீர் மற்றும் செப்டிக் டாங்குகள் மனிதர்களை கொண்டு சுத்தம் செய்வது.
  • 3. மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் வேலையை செய்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல்.

    9) தேசிய மீன் மரபணு வளங்கள் தகவலகம் மீன் நோய் இல்லாத மாநிலமாக அறிவித்த மாநிலம் எது?
    (A) மேற்கு வங்காளம்
    (B) அரியானா
    (C) ஒடிசா
    (D) தெலுங்கானா
    Show Answer

    Answer-(B) அரியானா
    Explanation:
  • 1983-வில் NBFGR (National Bureau of Fish Genetic Resources) லக்னோ- வில் நிறுவப்பட்டது.
  • ஹரியானா அரசாங்கம் ஜஜ்ஜாரில் அலங்கார மீன் குஞ்சுபொரிப்பகம் அமைக்க முடிவு செய்துள்ளது.

  • 10) UNICEF அதன் புதிய உலகளாவிய நல்லெண்ண தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த __________ ஐ நியமித்துள்ளது.
    (A) அமர்த்தியா சென்
    (B) லில்லி சிங்
    (C) விரேந்திர சிங்
    (D) ஷெட் அப்துல் கான்
    Show Answer

    Answer-(B) லில்லி சிங்

    11) பயணிகள் தேவைகளை பூர்த்தி செய்து சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை தருவதற்காக இந்திய ரயில்வே அமைச்சர் புதிய ஒருங்கிணைந்த மொபைல் செயலி____________ அறிமுகப்படுத்தினார்.
    (A) IRCTC Customer
    (B) Rail SAARTHI
    (C) IRCTC SAARATHI
    (D) Rail Customer
    Show Answer

    Answer-(B) Rail SAARTHI
    Explanation:
  • Rail SAARATHI – Synergised Advanced Application Rail Travel Help and Information.
  • டிக்கெட் புக்கிங், பெண்கள் பாதுகாப்பு, புகார் வசதி, முன்னேற்றத்திற்கான ஆலோசனை ஆகியவை இதில் அடங்கும்.

  • 12) உலக இளைஞர் திறன் தினம் ______________ அன்று அனுசரிக்கப்படுகிறது.
    (A) ஜூலை 15
    (B) ஜூலை 16
    (C) ஜூலை 17
    (D) ஜூலை 18
    Show Answer

    Answer-(A) ஜூலை 15
    Explanation:
    2017-ஆம் ஆண்டு உலக இளைஞர் திறன் தினத்திற்கான கரு “Skills for All”.

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment